ஆலய நிர்வாக அமைப்புகளில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடம் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பூக்கோட்டு காலிக்காவு பகவதி அம்மன் கோவில் மலபார் தேவசம் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் நிர்வாகக் குழுவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகளை சேர்ப்பதற்கு எதிரான மனுவை கேரள உயர்நீதிமன்றம் பரிசீலித்து வந்தது.
மலபார் தேவசம் வாரியத்தின் கீழ் வரும் எந்த ஒரு கோவிலிலும் அரசியல் பிரதிநிதிகளை நிர்வாகிகளாக நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கேரளாவில் 1,300 கோவில்களின் நிர்வாகத்தை மலபார் தேவசம் வாரியம் கவனித்து வருகிறது.